சச்சினின் 15 வருட கால சாதனையை முறியடித்த பங்களாதேஷ் வீரர்

Sachin Tendulkar New Zealand Indian Cricket Team New Zealand Cricket Team Bangladesh Cricket Team
By Dev Dec 20, 2023 10:43 AM GMT
Report

நியூசிலாந்து - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் வீரர் சௌம்யா சர்கார் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சௌம்யா சர்கார் 151 பந்துகளில் 169 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்துள்ளார்.

இதற்கு முன் ஒரு ஆசிய வீரரால் நியூசிலாந்து மண்ணில் பெறப்பட்ட தனிப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக 2009ஆம் ஆண்டு சச்சினால் எடுக்கப்பட்ட 163 ஓட்டங்களே இருந்தது. தற்போது இந்த சாதனை சௌம்யா சர்காரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணி தோல்வி

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுத்திருந்தது.

சச்சினின் 15 வருட கால சாதனையை முறியடித்த பங்களாதேஷ் வீரர் | Sachin S Record Has Broken By Bangladesh Cricketer

சௌம்யா சர்காரின் சிறப்பான ஆட்டத்தினால் பங்களாதேஷ் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 291 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 46.2 ஓவர்களில் குறித்த இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பங்களாதேஷ் அணி போட்டியில் தோல்வியுற்ற போதிலும் சௌம்யா சர்காரின் சாதனை துடுப்பாட்டத்தினால் பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்கள் சிறிது ஆறுதலடைந்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்ற அரசியலால் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமா..!

இலங்கை நாடாளுமன்ற அரசியலால் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமா..!

யாழ். புறநகர் பாடசாலைக்கு அருகில் போதை வியாபாரம்: 6 பேர் கைது - மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை

யாழ். புறநகர் பாடசாலைக்கு அருகில் போதை வியாபாரம்: 6 பேர் கைது - மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை

யாழ். பல்கலை வளாகத்திற்குள் பொருத்தமற்ற ஆடையுடன் நுழைய முற்பட்ட நபரால் ஏற்பட்ட சர்ச்சை

யாழ். பல்கலை வளாகத்திற்குள் பொருத்தமற்ற ஆடையுடன் நுழைய முற்பட்ட நபரால் ஏற்பட்ட சர்ச்சை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US