சபரகமுவ பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை: வெளியானது புதிய அறிவிப்பு
சபரகமுவ மாகாணத்தின் அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு தமிழ் மொழி பாடசாலைகளுககு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்க நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
விசேட விடுமுறை
இவ்வருடம் தீபாவளி பண்டிகையானது ஞாயிற்றுக் கிழமை வருவதால், அதற்கு மறுதினமான 13ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த விடுமுறையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சபரகமுவ மாகாணத்தின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும், எதிர்வரும் 13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் என வடமாகாணத் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan