இலங்கை பொலிஸ் திணைக்களம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸாருக்கான மதிப்பிடப்பட்ட செலவுகள் தொடர்பான அறிக்கைகளை, மாகாண பொலிஸ் தரப்புகளிடம் இருந்து கோருவதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஒட்டுமொத்த செலவுகளின் மதிப்பீடு உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு அரச அச்சகத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரச அச்சகத் திணைக்களத் தலைவர் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
