கொழும்பு மாவட்டத்திற்கு தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள ருவான் விஜேவர்தன
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளைக் கொழும்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, ருவான் விஜேவர்தன கம்பஹா மாவட்டத்தில் தொகுதி அமைப்பாளராகக் கடமையாற்றிய களனி மற்றும் பியகமை தொகுதிகளுக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 1977 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தின் பியகமை தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
இதன் பின்னர் கம்பஹா மாவட்டத்தைக் கைவிட்டு, கொழும்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியலில் ஈடுபட்டு வந்தார். ருவான் விஜேவர்தன 2010 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டு அதே மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.
எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்குத் தெரிவு செய்யப்படுவார் என நம்பப்படும் ருவான் விஜேவர்தன, ரணில் விக்ரமசிங்கவின் சகோதரியின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
