ஜனாதிபதி மற்றும் சரத் வீரசேகரவிடம் ருவான் விஜயவர்தன விடுத்துள்ள கோரிக்கை

Srilanka Ruwan Wijewardene United National Party Ranil
By Ajith Jul 04, 2021 06:09 PM GMT
Report

ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களின் கருத்து சுதந்திரத்திற்கு தற்போது மேற்கொள்ளப்படும் தடைகளை கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

பல ஆண்டுகளாக ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் அரசாங்க மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து விமர்சனங்கள் மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, வரலாறு முழுவதும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களின், கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாப்பிற்காக ஐக்கிய தேசியக்கட்சி துணை நின்றதைப்போன்று, எதிர்காலத்திலும் அதனை தொடரும் என ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களைத் துன்புறுத்திய குற்றவியல் அவதூறுச் சட்டத்தை அகற்றுவதில் தன்னை ஈடுபடுத்தியவர் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்பதை பலர் மறந்துவிட்டார்கள்.

இந்த நிலையில் ஊடகவியலாளர் தரிந்து எரங்க ஜெயவர்தனவுக்கு தற்போது ஏற்படுத்தப்பட்டு வரும் பிரச்சினைகளை விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மாதம் முதலாம் திகதி பேஸ்புக்கில் இந்த பத்திரிகையாளர் பகிர்ந்து கொண்ட ஒரு செய்திக்கு மேல் மாகாணத்தின் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி தேசபந்து தென்னகோன் வழங்கிய பதில் ஒரு போலிஸ் அதிகாரிக்கு பொருந்தாத பதிலாகும் என்று விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள் தங்கள் கடமைகளை சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக ருவான் தெரிவித்துள்ளார்.

தரிந்து எரங்க ஜெயவர்தன தனது இணையதளத்தில் ஒரு தவறான செய்தியை வெளியிட்டிருந்தால் அல்லது யாரையும் அவமதித்திருந்தால், இந்த விஷயத்தை தெளிவுபடுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

எனினும், இந்த சுதந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பில், எந்தவொரு நபருக்கும் அச்சுறுத்தும் உரிமை எந்த தரப்புக்கும் இல்லை என்று விஜேவர்தன கூறினார்.

எனவே இந்த விவகாரம் குறித்து முறையான, பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம், ருவான் விஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் அனைத்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வெகுஜன ஊடக அமைச்சராக முன்னர் பதவி வகித்த விஜேவர்தன கேட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US