ரணிலின் இடத்திற்கு ருவான்! பிரதான அமைச்சு பதவி ஒன்றையும் வழங்கத் திட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவை, நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் கொண்டு வருவதற்கான நகர்வுகளில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுப்பாதுகாப்பு அமைச்சு ருவானுக்கு
எனவே, ருவான் விஜயவர்தனவை முன்னிறுத்துவது தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலின் பேரில் அவர் நியமனம் செய்யப்பட உள்ளார்.
ருவான் விஜேவர்தன தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முன்மொழியப்பட்டால், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அவருக்கு சட்டம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சு பதவியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது ருவான் விஜேவர்தன சட்டம் மற்றும் ஒழுங்கு இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.