ரணிலின் அதியுச்ச தந்திர நகர்வினால் அச்சத்தில் சஜித்! அரசியல் ஆய்வாளர் தகவல் (VIDEO)
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தற்போது அதி உச்ச தந்திர நகர்வில் ஈடுபட்டுள்ளமையினால் சஜித் பிரேமதாச கடும் அச்சத்தில் உள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச சாதியில் குறைந்துள்ளமையினால் தற்போது ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவர பௌத்த மகா சங்கத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன்,அரசியலில் மீண்டும் எழுச்சி பெற ராஜபக்ச குடும்பமும் இதனையே விரும்புகின்றனர்.
இவ்வாறான நிலையில், சிங்கள தேசத்தில் மிக பெரிய இரத்த ஆறு ஓட வேண்டும்.அவ்வாறு இரத்த ஆறு ஓடி அதில் சிங்கள மேல் வர்க்கத்தினரின் இரத்தமும் கலந்தால் மாத்திரமே சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதி கதிரையில் அமர முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,