கசினோ இலங்கைப் பிரஜைகளுக்கானது அல்ல! சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் தகவல்
இலங்கைப் பிரஜைகள் கசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் கசினோ சட்டத்திட்டம் இயற்றப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று(04) கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
“அன்று நாம் கசினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையானது, இலங்கையின் சாதாரண மக்கள் பங்கு கொள்வதை தவிர்ப்பதற்காகவே இருந்தது.
அன்றைய எதிர்ப்புக்கான காரணம்
அதற்கான சட்டத்திட்டங்களை இயற்றிய பின்னரே நாம் கசினோ திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். சிட்டி ஒப் ட்ரீம் திட்டம் 10 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாகும். ஆரம்ப நிகழ்வு அன்று ஜனாதிபதி அநுரவும் கலந்து கொண்டிருந்தார்.
கொழும்பில் ஹோட்டல் அறைகளுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. இப்போதைக்கு 3500 அறைகளே உள்ளன. இத் திட்டம் எமக்கு கைகொடுக்கும் என நினைகிறேன். சிங்கப்பூர், அமெரிக்கா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருக்கும் பெரிய நிறுவனமே கசினோ திட்டத்தில் இணைந்துள்ளது.
இவற்றின் ஊடாக வெளிநாட்டு உல்லாச பயணிகளை ஈர்ப்பதே எமது நோக்கமாகும். கடந்த காலங்களில் அப்பா, மகன், நண்பர்கள் ஆகியோர் ஜோம்ஸ் பார்க்கர் போன்றோருடன் கசினோ திட்டத்தை கொண்டு வர கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டனர்.
அதற்காகவே நாம் போராட்டம் நடத்தினோம். அதை எதிர்த்தோம். இவை பொது மக்களை பாதிக்கும் செயற்திட்டமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா




