மேற்கத்தேய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம்: பெண்டகன் எச்சரிக்கை (Video)
ரஷ்ய அதிபர் புடின் விரைவில் மேற்கத்தேய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுத எச்சரிக்கையை விடுக்கலாமென அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பெண்டகன் உளவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில்,
உக்ரைனின் பாதுகாப்பான பகுதிகள் ரஷ்யாவிற்கு சவாலை தருகின்றன. இதனால் அவர்களின் மனித வளம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை குறைகிறது.
இதன் விளைவாக நீண்டகால பொருளாதார மந்தநிலைக்கு ரஷ்யா உள்ளாகலாம். இந்த போர் தொடர்ந்து நீளும்பட்சத்தில் அதன் விளைவுகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தும் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,



