ரஸ்யா, துருப்புக்களை திரும்பப்பெறுவது சூழ்ச்சியாக இருக்கலாம் என்று உக்ரைன் சந்தேகம்!
உக்ரைனில், ரஸ்ய துருப்புக்களை திரும்பப் பெறும் செயற்பாடு, ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம் என்று உக்ரைனின் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
துருக்கியின் இஸ்தானாபுல்லில் நேற்று நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதன் அடிப்படையில், ரஸ்யாவின் படையினர், கிய்வ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய இடங்களில் இருந்து தொடர்ந்தும் நகர்ந்து வருகின்றன.
எனினும் ரஸ்ய படைகள், தற்போது கிழக்கு பிராந்தியமான டொன்பாஸில் கவனம் செலுத்துவதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ரஸ்யாவின் இந்த செயற்பாடு, உக்ரைனின் இராணுவத்தை தவறாக வழிநடத்தும் செயற்பாடாக இருக்கலாம் என்று உக்ரைன் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை கிய்வ் பகுதியில் இருந்து ரஸ்;ய துருப்புக்கள் நகர்ந்த போதிலும், கெய்விற்கு அச்சுறுத்தல் உள்ளது என்று உக்ரைன் படையினர் குறிப்பிட்டு;ள்ளனர்.
குறிப்பாக கிழக்கின் டோனெட்ஸ்க் அருகே எதிரியின் தாக்குதல்கள் தொடர்வதாக உக்ரைன் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை நோவோகார்லிவ்கா மற்றும் லுஹிவ்ஸ்கே ஆகிய இரண்டு இடங்களில் ரஸ்ய படைகள் தங்கள் நிலையை பலப்படுத்தி கண்ணிவெடிகளை புதைத்து வருவதாக உக்ரைனியர்கள் கூறுகின்றனர்.