கடும் இழப்புக்களை அடுத்து உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ள ரஸ்யாவின் வாக்னர் கூலிப்படையினர்!(video)
ரஸ்யா, தமது நாட்டில் அதிகம் அறியப்படாத வாக்னர் குழுவினரை கிழக்கு உக்ரைனுக்கு கூலிப்படைகளாக அனுப்பியுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையி;ல் உக்ரைனில் போர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த குழுவின் மூத்த தலைவர்கள் உட்பட1,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை அனுப்புவதற்கு ரஸ்யா எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடுமையான இழப்புகள் மற்றும் பெருமளவில் ஸ்தம்பிதமடைந்த படையெடுப்பு காரணமாகவே வாக்னர் கூலிப்படைகளை உக்ரைனுக்கு அனுப்ப ரஸ்;யா கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
வாக்னர் குழு என்பது ரஸ்யாவின் இயங்கும் மிகவும் இரகசியமான அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
சிரியா, லிபியா மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்காக கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தக்குழுவின் சுமார் 10,000 செயற்பாட்டாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர் என்றும் நம்பப்படுகிறது
இதேவேளை ரஸ்யாவின் படைப்பிரிவுகள் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட பின்னர் பலவீனமடைந்து விட்டதாக உக்ரைன் படையினர் கூறுகிறார்கள்.
இதனையடுத்து ரஸ்ய ஆக்கிரமிப்புப் படைகளின் கட்டளை, கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் எதிரியின் போர் திறன் வீழ்ச்சியை ஈடுசெய்ய முயற்சிக்கிறது என்றும் உக்ரைன் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பயனுள்ள பாதுகாப்பைத் தொடர்ந்து வருவதாகவும், ரஸ்;யர்களிடமிருந்து கம்யங்கா மற்றும் டோபோல்ஸ்கே ஆகிய இரண்டு குடியேற்றங்களை மீட்டெடுத்ததாகவும் உக்ரேனியப் படைகள்; தெரிவித்துள்ளன.