மாற்று வழியை கையில் எடுக்கவேண்டி வரும்! ரஷ்யப் படைகளுக்கு தனது வியூகத்தை அறிவித்த உக்ரைன் ஜனாதிபதி (Video)
எங்கள் நாட்டிலிருந்து ரஷ்யப்படைகள் வெளியேறாவிடில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் தற்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், ‛உடனடியாக போர் நிறுத்த வேண்டும்; அதேபோல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும், கிவ் நகரிலிருந்து ரஷ்ய ராணுவத்தில் பெரும் படைகள் 30 கிலோமீட்டர் தொலைவில் முகாமிட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ரஷ்யப் படைகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, ரஷ்ய படையினர் எங்கள் நாட்டில் இருந்து வெளியேறுங்கள். தங்களின் உயிரை காப்பாற்ற திரும்பி செல்லுங்கள். தாக்குதலை நிறுத்தா விட்டால் கடும் விளைவை ரஷ்யா சந்திக்கும்.
இதேவேளை, உக்ரைனில் உள்ள ராணுவ அனுபவம் உள்ள கைதிகளை விடுதலை செய்து போரில் ஈடுபடுத்துவோம் என்றும் அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தமது நாட்டை உறுப்பு நாடாக உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வெலெடிமீர் ஷெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
காணொளியொன்றை வெளியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி, ரஷ்ய படையினர் ஆயுதங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இராணுவ தளவாடங்களை கைவிட்டு, உயிரை காப்பாற்ற வேண்டுமாயின் உக்ரைனில் இருந்து வெளியேறுமாறும் கட்டளை தளபதிகளை நம்ப வேண்டாம் எனவும் உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ள ரஷ்ய தூதுக்குழுவினர் உக்ரைன் பெலரூஸ் எல்லைக்கு சென்றுள்ளனர். யுத்த நிறுத்தம் மற்றும் உக்ரைனில் உள்ள ரஷ்யப் படையினரை மீளப் பெறுவது உள்ளிட்ட விடயங்கள் இந்தப் பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்தப் பேச்சுக்களில் முக்கியமான திரும்புமுனைகள் எதுவும் ஏற்படும் என நம்பவில்லை என உக்ரைன் ஜனாதிபதி வெலெடிமீர் ஷெலென்ஸ்கி முன்னர் கூறியிருந்தார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படையினர் சுற்றிவளைத்துள்ள நிலையில்,கடந்த இரண்டு நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டுள்ளது.
ஐந்தாவது நாளாகவும் ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், அடுத்த 24 மணித்தியாலங்கள் மிகவும் முக்கியமானவையாக இருக்கும் என உக்ரைய்ன் ஜனாதிபதி வெலெடிமீர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைனின் வட கிழக்கு நகரான செர்னிஹிவ் நகரில் இரவு முழுவதும் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த நகரம் தொடர்ந்தும் உக்ரைன் படையினர் வசம் காணப்படும் நிலையில், தமது தரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு முதல் முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
எனினும் உயிரிழப்புக்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை.
இதேவேளை இதுவரை 05 ஆயிரத்து 300 ற்கும் அதிகமான ரஷ்ய படையினர் தமது தாக்குதலில் பலியாகியுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. 191 தாங்கிகள், 19 விமானங்கள், 29 உலங்கு வானூர்திகள் மற்றும் 816 யுத்த கவச வாகனங்களை தமது நாட்டு படையினர் அழித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே உக்ரைனில் இருந்து 04 இலட்சத்து 22 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அயல்நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் கூறியுள்ளது.
அத்துடன் உக்ரைனுக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா முகவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.