பரபரப்பாகும் உக்ரைன் ரஷ்ய போர்! புடின் திட்டமிட்டுள்ள பயங்கர தாக்குதல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது பாரிய தற்கொலை படை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளார் என அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
ஓரிரு நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்த்த உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தற்போது ஓராண்டை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்கொலைத் தாக்குதல்கள்
இதில், அதிர்ச்சியூட்டும் இராணுவ பலவீனம், தோல்வி, திறமையின்மை, மரணம், மற்றும் படுகாயம் ஆகியவற்றில் புடின் தாக்குதல்கள் திட்டங்கள் சிக்கியுள்ளன.
உக்ரைனில் குறைந்தபட்ச இராணுவ ஆதாயங்களுக்காக புடின், ரஷ்யர்களின் அதிகமான வாழ்க்கை செலவில் நூற்றுக்கணக்கான வீரர்களை முன்வரிசைக்கு அனுப்புகிறார்.
மேலும் வரும் மூன்று மாதங்களுக்கு உக்ரைனியர்கள் மீது மிகப்பெரிய தற்கொலைத் தாக்குதல்களை நடத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளார் என்று அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
போர் நிலவரம் குறித்து தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில், புடின் மூன்று காட்சிகளை எதிர்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று காட்சிகள்
அதில் முதலாவதாக ரஷ்யாவின் நடவடிக்கைகள் நாட்டின் அண்டை நாடுகளை தாக்குதல்களால் அச்சுறுத்தும்.
இரண்டாவதாக, மேற்கில் இருந்து பெற்ற ஆயுத விநியோக உதவியுடன் உக்ரைன் முன்னேற்றத்தை அடையும்.
மூன்றாவது, ரஷ்யாவின் படையெடுப்பில் இராணுவ தேக்கநிலை மற்றும் புடின் போரின் உள்நாட்டு நம்பிக்கை இழப்பு" ஆகியவற்றைத் தொடர்ந்து வீழ்ச்சியடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.