ரஷ்ய-உக்ரைன் அமைதிப்பேச்சு இன்றும் தொடர்கிறது! அமெரிக்க ஜனாதிபதி பிரசல்ஸ் விரைகிறார்! (காணொளி)
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான அமைதிப்பேச்சுவார்த்தை இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்ஹாய்லோ போடோல்யாக் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் நிச்சயமாக இணக்கத்துக்கு இடமுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தையின்போது அடிப்படை விடயங்களில் முரண்பாடுகள் இருந்தன.
எனினும் இணக்கத்துக்கு இடமுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரசல்ஸ க்கு செல்லவுள்ளார்.
அங்கு அவர் ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடர்பில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு எதிராக ரஷ்யா பயணத்தடை விதித்துள்ளமை எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
எவரும் ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்லப்போவதில்லை என்பதால், இந்த தடையினால் பாதிப்பு இல்லை என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.