உக்ரைனிலிருந்து 4.5 மில்லியன் மக்கள் போர் அகதிகளாக வெளியேற்றம் : ஐக்கிய நாடுகள் சபை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ படையெடுப்பு 45 நாட்களையும் தாண்டி நடந்து கொண்டிருக்கின்றது.
இச்சூழலில் இது வரை சுமா் 4.5 மில்லியன் மக்கள் தமது சொந்த நாட்டில் இருந்து போர் அகதிகளாக பாதுகாப்பு வாழ்விடம் தேடி வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர்களில் கிட்டத்தட்ட 2.6 மில்லியன் மக்கள் போலந்து நாட்டிற்கும் 686,000 மேற்பட்ட மக்கள் ரோமானியா நாட்டிற்கும் இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இடம் பெயர்ந்தவர்களில் 90% பெண்களும் சிறுவர்களும் அடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ள அதேவேளை 7.1மில்லியன் மக்கள் உள்நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளதாவும் அவர்களில் 210,000 பேர் உக்ரேனியர்கள் அல்லாதவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி போர் ஆரம்பிக்கப்படுவதற்கு அதாவது 2022ம் ஆண்டிற்கு முன்னர் உக்ரைன் சனத்தொகை கிட்டத்தட்ட 37 மில்லியனாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.