ரஷ்ய தொலைக்காட்சி நேரடி செய்தியை குழப்பி போராட்டம் நடத்திய பெண் செய்தி ஆசிரியர்!(வீடியோ)
“அவர்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்கள்" என்ற பதாகையுடன் ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி ஒன்றின் நேரடி செய்தி ஒளிபரப்பின்போது போர் -எதிர்ப்பாளர் ஒருவர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் “செனல் வன்”னில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செய்தி தொகுப்பின்போது, குறித்த தொலைக்காட்சி சேவையின் செய்தி தயாரிப்பாளர் - மெரினா ஓவ்சியானிகோவா என்பவரே செய்தி வாசிப்பாளரின் பின்னால் வந்து தமது எதிர்ப்பை காட்டினார்.
அதில் அவர் உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகளை "குற்றம்" என்று குறிப்பிடடார்.
தொலைக்காட்சி திரையில் பொய்களை சொல்ல தம்மை அனுமதித்தமைக்காக தாம் வெட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்
பொதுமக்களால் மட்டுமே “பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த முடியும்" என்று கூறி, போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க ரஸ்ய மக்களுக்கு அவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஓவ்சியனிகோவா காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.