உக்ரைன் - ரஷ்ய யுத்தம்! ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய அறிவிப்பு
உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் இருந்து ரஷ்யப் படைகள் அனைத்து கண்ணி வெடிகளையும் அகற்றி விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷ்யப் படைகள் பல வார முற்றுக்கைக்கு பிறகு தங்களது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.
ஆனால் ரஷ்ய படைகளின் இந்த முழுக்கட்டுப்பாட்டிற்கு முன்னதாக, உக்ரைன் தங்களது துறைமுகங்களை பாதுகாப்பதற்காக கண்ணிவெடிகளை அமைத்து இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டி இருந்தது.
இருப்பினும் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த உக்ரைன், கண்ணிவெடிகள் தொடர்பான ரஷ்யாவின் கூற்று முற்றிலுமாக தவறானது எனத் தெரிவித்தது.
இந்தநிலையில், தற்போது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் உக்ரைனின் அசோவ் கடல் பகுதியின் துறைமுக நகரான மரியுபோலில் இருந்து அனைத்து கண்ணி வெடிகளையும் ரஷ்ய படைகள் அகற்றி விட்டதாக தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
