மஞ்சள் ஆடையில் ரஸ்ய விண்வெளி வீரர்கள் உக்ரைனுக்கு ஆதரவா? ரஸ்யாவின் பதில்!(காணொளி)
உக்ரைனுக்கு எதிரான ரஸ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரேனிய நிறங்களை அணிந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் மூன்று ரஸ்ய விண்வெளி வீரர்கள் ஏறினர் என்ற கூற்றை ரஸ்யா நிராகரித்துள்ளது.
ரஸ்யாவினால் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வந்த மூன்று ரஸ்ய வீரர்களே நீல நிறம் கலந்த மஞ்சள் நிற உடைகளை அணிந்திருந்தனர்.
உக்ரைனிய நிறமான மஞ்சள்- நீல நிறந்தை அணிந்து அவர்கள், ரஸ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக செயற்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்த செய்தியை ரஸ்ய விண்வெளி ஆய்வு மையம் மறுத்துள்ளது
ரஸ்ய விண்வெளி வீரர்களான டெனிஸ் மொட்வீவ், ஒலெக் ஆர்டெமியேவ் மற்றும் செர்ஜி கோர்சகோவ் ஆகியோர் கஜகஸ்தானில் உள்ள ரஸ்ய நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு இடத்தில் புறப்பட்ட விண்வெளி ஓடத்தில் இருந்து மூன்று மணி நேரத்துக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.
வழமையாக ரஸ்ய விண்வெளி வீரர்களின் ஆடைகள் வெள்ளை நீல நிறமாக இருக்கின்றபோதும் இவர்கள் மூவரும் நீலம் கலந்த மஞ்சள் ஆடைகளை அணிந்திருந்தமையை கொண்டு அவர்கள், உக்ரைனின் ஒருமைப்பாட்டுக்கு தமது ஆதரவை வெளியிட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன.
இதனையே ரஸ்ய தரப்பு மறுத்துள்ளது.
இதேவேளை விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏறிய இந்த தருணத்தை ரஸ்யாவின் விண்வெளி மையமான ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆகியன நேரடியாக ஒளிபரப்பின.