ரஷ்ய நகர் ஒன்றில் முதன்முறையாக தாக்குதல் நடத்திய உக்ரைன்! ரஷ்யாவின் கடுமையான எச்சரிக்கை! (video)
ரஷ்ய நகரம் ஒன்றில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கின்; மீது உக்ரைனின் இரண்டு தாக்குதல் உலங்கு வானூர்திகள், தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ட்விட்டரில் பகிரப்பட்ட காணொளியின்படி,உக்ரைனின் எல்லையில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள பெல்கோரோடில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீச்சுவாலை எழுவது காண்பிக்கப்பட்டது
குறித்த எண்ணெய் கிடங்கில் ஏவுகனைகள் தாக்குவதையும் காணொளிகள் காட்டுகின்றன. ரஸ்ய நகரின் ஆளுநர்; வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் சம்பவத்தில் எவரும் கொல்லப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை இந்த தாக்குதல் குற்றச்சாட்டை உக்ரைன் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில் ரஸ்ய எண்ணெய் கிடங்கின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உதவாது என்று ரஸ்ய நிர்வாகமான கிரம்ளின் தெரிவித்துள்ளது.