தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா! இரண்டு தளபதிகள் உள்ளிட்ட பலர் கொலை
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 உக்ரைன் இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வாக்னர் குழுவினரின் கிளர்ச்சியை ஒடுக்கிய வேகத்தில் உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
டோர்ஸ்க் மகாணத்தின் வடக்கே உள்ள கிரமடோர்ஸ்க் நகரில் உணவக மற்றும் வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ராஜ துரோக குற்றத்திற்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும்
இதில் 2 உக்ரைன் தளபதிகள் சுமார் 50 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இத்தாக்குதலில் 12 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக உக்ரைன் கூறியுள்ளது.
இதனிடையே தாக்குதல் நடத்தப்பட்ட இடம் குறித்து புகைப்படங்களை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக உள்ளூர் வாசி ஒருவரை உக்ரைன் கைது செய்திருக்கிறது.
ரஷ்யாவிற்காக உளவு பார்ப்பவர்களுக்கு ராஜ துரோக குற்றத்திற்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |