போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு
உக்ரைனுடனான போரில் புடினுக்கு வெற்றியா தோல்வியா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார் என்கிறது ஜேர்மன் தரப்பிலிருந்து எழுந்துள்ள ஒரு குரல்.
ஜேர்மனியைக் கைவிட்ட புடின்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. ஜேர்மனிக்கும் வேறு வழியில்லை, ஆகவே, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொண்டது. ஆனால், அதற்காக ஜேர்மனியை தண்டிக்க முடிவு செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
ஆகவே, தங்கள் எரிவாயுவை அதிகம் சார்ந்திருந்த ஜேர்மனியைக் கைகழுவினார் புடின். அவரது முடிவு ஜேர்மனியில் பதற்றத்தை உருவாக்கியதை மறுப்பதற்கில்லை. குளிர்காலத்தை எப்படி சமாளிக்கப்போகிறோமோ என்ற பயம் பொதுமக்களுக்கும், அரசுக்கும் இருந்தது.
ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார்
ஆனால், ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் புடின் தோற்றுவிட்டார். ஆம், அவர் கைவிட்டபோதிலும் ஜேர்மனி சமாளித்துக்கொண்டது.
Gazprom நிறுவனத்திலிருந்து எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டு ஐந்து மாதங்களாகிறது. ஆனாலும், ஜேர்மன் மக்கள் குளிரில் உறைந்துபோய்விடவில்லை.
அவர்களுடைய தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை அவர்களுக்கு உருவாகவும் இல்லை. இன்னமும் கைவசம் போதுமான எரிவாயுவும் உள்ளது.
ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால் அது நம்மைப் பழிவாங்கிவிடுமென்ற பயமும் ஜேர்மன் அரசியல்வாதிகளுக்கு இல்லை. ஆக, ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் தோற்றுவிட்டார் புடின்.
எனவே, அடுத்து
உக்ரைன் அவரைத் தோற்கடிப்பதற்காக உக்ரைனுக்கு தனது ஆதரவை
அதிகப்படுத்திவருகிறது ஜேர்மனி.