உக்ரைன் படை ஆவேச தாக்குதல் - 24 மணிநேரத்தில் 600 ரஷ்ய படையினர் கொன்று குவிப்பு(Video)
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றிபெறமுடியாத வகையில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் படைகள் கடும் எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
உக்ரைனில் சில பிரதேசங்களை கைப்பற்றிய ரஷ்யா அதில் மூன்று பிரதேசங்களை தன்னுடன் இணைப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றதாக அறிவித்து அவற்றை இணைத்துக்கொண்டது.
இவ்வாறு இணைக்கப்பட்ட கெர்சன் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதற்கு ரஷ்ய படை முனைப்பு காட்டி வருவதால் அப்பகுதியில் மோதல் உக்கிரம் பெற்றுள்ளது.
இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 600 ரஷ்ய போர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,