ரஸ்யர்களுக்கு எதிராக உக்ரைனியர்களுக்கு உதவும் கனடாவின் மிகக்கொடிய இராணுவ அதிகாரி!
உலகின் மிகக் கொடிய துப்பாக்கி சுடும் வீரர்களில் (sniper) ஒருவராகக் கருதப்படும் கனேடிய இராணுவத்தின் முன்னாள் துப்பாக்கி சுடும் வீரர், ரஸ்ய படையெடுப்பிலிருந்து உக்ரைனைப் பாதுகாப்பதற்காக உக்ரைனுக்கு சென்றுள்ளார்.
40 வயதான துப்பாக்கி சுடும் வீரர் - வாலி (Wali )என்ற பெயரால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுகிறார்
ஆப்கானிஸ்தானில் அவர் சண்டையில் ஈடுபட்டபோது இரண்டு மைல் (3.2 கிமீ) தொலைவில் எதிரிகளை குறிவைத்து கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் இஸ்லாமிய அரசுக்கு எதிராக குர்திஸ் போராளிகளுடன் அவர் இணைந்து போராடியுள்ளார்
கனேடிய ஊடகம் ஒன்றின் தகவல்படி அவர், மேலும முன்னாள் கனேடிய முன்னாள் இராணுவ அதிகாரிகளுடன் உக்ரைனுக்கு சென்றுள்ளார்;.
“நான் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். உக்ரைன் மக்கள் ஐரோப்பியர்களாக இருக்க விரும்புகிறார்கள். எனினும் ரஸ்யர்;களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் மீது குண்டுவீசப்படுகிறது” என்று வாலி கனேடிய ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து சுமார் 20,000 தன்னார்வலர்கள் உக்ரைன் சென்று சண்டையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 17 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam