அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை : சரிவைச் சந்திக்கும் அமெரிக்க டொலர்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த எதிர்பார்ப்புகளால் டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுவதால், சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து ஏழாவது நாளாக சரிவைக் கண்டுள்ளது.
ட்ரம்பின் தற்போதைய அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்களில் பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் துறைமுகங்கள் மீது வொஷிங்டன் முற்றுகையை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ட்ரம்பின் தற்போதைய அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அமெரிக்க நிர்வாகம் இந்தப் போரிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளையே தேடுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று டொராண்டோவில் உள்ள கோர்பே நிறுவனத்தின் தலைமை சந்தை உத்தி நிபுணர் கார்ல் ஷமோட்டா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு குறியீட்டு அளவிலான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அதன் மூலம் தாக்குதல்கள் நிறுத்தப்படவும், முடக்கப்பட்ட கடல் வழிப்பாதைகள் மீண்டும் திறக்கப்படவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கிறது.
இந்தநிலையில் ஏனைய முக்கிய நாணயங்களுக்கு எதிரான டொலரின் மதிப்பு 0.26 சதவீதம் குறைந்து 98.08 ஆக உள்ளது. இது கடந்த மார்ச் 2-ஆம் திகதிக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும்.
டொலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு 0.33 சதவீதம் உயர்ந்து 1.1796 டொலராக உள்ளது. அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக வந்திருப்பதும் டொலர் மதிப்பு சரிவுக்கு மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 9 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam