உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் புது வியூகம்
உக்ரைனுக்கு எதிராக ஒரு மாதம் கடந்த நிலையிலும் ரஷ்ய படைகளால் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைனும் கடுமையான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் சில பகுதிகளை எதிர்த் தாக்குதல் மூலம் மீட்டெடுத்தனர்.
இந்நிலையில் உக்ரைன் படைகளின் கடுமையான எதிர்த்தாக்குதலை முறியடித்து உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முயற்சியின் அடுத்த நகர்வாக ரஷ்யா தனது படைக்கு புதிய தளபதியாக ஜெனரல் அலெக்சாண்டர் டிவோர்னிகோவை ரஷ்ய அதிபர் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் அலெக்சாண்டர் டிவோர்னிகோ 2015-ல் சிரியா அரசுக்கு உதவும் வகையில் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க நியமிக்கப்பட்டார்.
இவருடைய தலைமையில் சிரியாவின் அலெப்போ நகரம் கைப்பற்றப்பட்டு சிரியா அரசிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.