உக்ரைனுக்கு தொடர்ச்சியாக ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா
ரஷ்யாவுடனான போர் உக்கிரத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும் உக்ரைன் படைகளை போர்க் களத்தில் தக்கவைக்கும் நோக்குடனும் அமெரிக்கா தொடர்ந்தும் ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றது.
இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை அமெரிக்க அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் அமெரிக்க அதிபரின் Presidential Drawdown Authority எனப்படும் ஆணையகத்தில் இருந்து சுமார் 750 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஆயுத உதவியாக உக்ரைனுக்கு அனுப்பப்பட இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஆயுத உதவிகளினால் ரஷ்யா பாரிய அழிவுகளை சந்தித்து வருகின்ற நிலையிலும் உக்ரைனில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு ரஷ்ய படைகள் தற்போது மெல்ல மெல்ல பின்வாங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், போர் ஆரம்பித்ததிலிருந்து இது வரை சுமார் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான
ஆயுதங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.