உக்ரைன் போர் களத்தில் சிறந்தவர்களில் சிறந்தவர்களை இழந்த ரஸ்யா! (photos)
உக்ரைனுக்கு எதிரான போரின் போது, ரஸ்யா அதிகமாக நம்பியிருந்த 331 வது காவலர் பாராசூட் பிரிவின் வீரர்கள் பலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ரஸ்யாவின் போர் திட்ட சிதைவை பிரதிபலிக்கிறது. இந்தப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, கேர்னல் செர்ஜி சுகாரேவ், மார்ச் 13 அன்று உக்ரைனில் கொல்லப்பட்டார்,
இதனையடுத்து அவருக்கு மரணத்திற்குப் பின் ரஸ்ய கூட்டமைப்பின் ஹீரோ என்ற பதக்கம் வழங்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில், ரஸ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் யூரி சடோவென்கோ பங்கேற்றார்.

இந்தநிலையில் அந்த படையின் குறைந்தது 39 உறுப்பினர்கள் உக்ரைன் போரில் இறந்துள்ளனர்.
ரஸ்;யாவின் வான்வழிப் படைகளின் தலைமையில் பெலாரஸிலிருந்து உக்ரைனுக்குள் முன்னேறியபோதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
ரஸ்யாவின் 331வது பாரசூட் படையினர்; “சிறந்தவர்களில் சிறந்தவர்கள்" என்று ஒரு ஜெனரல் முன்னதாக கூறியிருந்தார்

இந்த பிரிவு போல்கன், செச்சினியா மற்றும் உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் 2014இல் பணியாற்றியது
அத்துடன் மொஸ்கோவில் செங்சதுக்க அணிவகுப்புகளில் தவறாமல் பங்கேற்று வருகிறது