ரஷ்யாவுடனான பேரில் உக்ரைன் கடும் சவால்களை எதிர்நோக்கும்: எச்சரிக்கும் அமெரிக்கா
ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்பதில் உக்ரைன் கடுமையான சவால்களை எதிர்நோக்கும் என அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரியான மார்க் மில்லேய் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படையினருக்கு எதிராக உக்ரைன் பதில் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், நேட்டோ தலைமையகத்தில் நேற்றைய தினம் (15.06.2023) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டபோதே மார்க் மில்லேய் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாகவும் ஸ்திரமான வேகத்தில் முன் நகர்கின்றது.
இது மிகவும் கடினமாகப் போர், வன்முறை நிறைந்த போர், இந்த மோதல் குறிப்பிடத்தக்களவு காலத்தையும் செலவையும் ஏற்படுத்தும்.
இந்த போர் குறுந் தூர ஓட்டமல்ல
உக்ரைனின் பதில் தாக்குதல்கள் எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும் என்பதனை தற்போதைக்கு எதிர்வு கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவிற்கு எதிரான போர் ஓர் குறுந்தூர ஓட்டமல்ல எனவும் அது ஓர் மரதன் போட்டி எனவும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் கூறியுள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் தேவைப்படும். ஆரம்பத்தில் பின்னடைவுகளைச் சந்தித்த போதும் உக்ரைனிடம் சிறந்த பலம் இருந்து வருகின்றது.
இரண்டு தரப்புக்களுக்கும் இழப்புக்கள் ஏற்படும்
உக்ரைனிடமிருந்து மீட்கப்பட்டதாக ரஷ்யா ஒரு தொகுதி தாங்கிகளை பல கோணங்களில் காண்பித்து பிரசாரம் செய்து வருகின்றது.
இது ஓர் போர் எனவும் நிச்சயமாக இரண்டு தரப்புக்களுக்கும் இழப்புக்கள் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உக்ரைனின் பதில் தாக்குதல்கள் ஆரம்ப நிலையில் காணப்படுவதாகவும் எதிர்காலத்தில் உக்கிர மோதல்கள் இடம்பெறும் எனவும் பாதுகாப்பு விற்பன்னர்கள் தெரிவித்துள்ளனர்.
Russian and Ukrainian forces both conducted offensive operations in western #Donetsk Oblast on June 15.
— ISW (@TheStudyofWar) June 16, 2023
RU forces likely conducted a limited ground attack in the #Vuhledar area to draw UKR forces away from #VelykaNovosilka, where UKR troops continue #counteroffensive operations. https://t.co/tPjsWOl9ro pic.twitter.com/hjvSMbVNQS
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |