ரஷ்யா தொடர்பில் உக்ரைனின் உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை-உலக செய்திகள்
முக்கிய தெற்கு நகரமான கெர்சனுக்குள் ரஷ்யா மேலும் துருப்புக்களை அனுப்புவதாக உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடானோவ் எச்சரித்துள்ளார்.
சில ரஷ்ய பிரிவுகள் வெளியேறக்கூடும் என்று உக்ரைன் முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது கெர்சனை பாதுகாக்க தயாராகி இருக்கலாம் என்று புடானோவ் கூறியுள்ளார்.
அத்துடன், ரஷ்ய எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக மாயையை உருவாக்க முயற்சிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்யா கெர்சனைக் கைப்பற்றியது, ஆனால் சமீபத்தில் உக்ரைனிய துருப்புக்கள் டினிப்ரோ ஆற்றின் வழியாக முன்னேறும்போது ரஷ்ய துருப்புகள் அழுத்தத்திற்கு உள்ளாகின.
இதனால், நகரில் உள்ள ரஷ்ய அதிகாரிகள் ஆயிரக்கணக்கான பொதுமக்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே, அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் உக்ரைனில் உள்ள இரண்டு தளங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்புவதாக ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகள்,