உக்ரைன் படையினரால் 14ஆயிரம் ரஷ்ய படையினர் கொல்லப்பட்டனர் (காணொளி)
உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது
ரஷ்யப் படையெடுப்பின் 23வது நாளில் இந்த தகவலை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும், போர் பாதிப்புக்கள் தொடர்பாக வேறுபட்ட எண்ணிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
இந்தநிலையில் 2022, மார்ச் 3 அன்று, ரஷ்யா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தனது 498 துருப்புக்கள் போரில் கொல்லப்பட்டதாகக் கூறியது,
எனினும் அதன் பின்னர் எந்த தகவல்களையும் ரஷ்யா வெளியிடவில்லை.
இதற்கிடையில் ரஷ்ய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7,000 க்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 450 போர் தாங்கி ஊர்திகள்,93 விமானங்கள், 112உலங்கு வானுார்திகள்,43 விமான எதிர்ப்பு அமைப்புகளை தாம் அழித்ததாக உக்ரைன் கூறியுள்ளது.



