போர் சூழ்நிலையிலும் இசையை மறக்காத உக்ரைனியர்கள்! (காணொளி)
உக்ரைனில் கடினமான போர் சூழ்நிலையிலும் கூட உக்ரேனிய படையினர் பாடல் இசைக்கும் பல காணொளிகள் வெளியாகியுள்ளன.
லிவிவில் உள்ள தொடரூந்து சதுக்கத்தில் பியானோ கலைஞர் 'வாட் எ பியூட்டிஃபுல் வேர்ட்'( What a beautiful world)வாசித்துக்கொண்டிருந்தார்,
இதன்போது ஏதிலிகள் தொடரூந்துகளில் ஏறுவதற்காக விரைந்துக்கொண்டிருந்தனர்.
இதேவேளை ஒரு நிலத்தடி தங்குமிடத்தில் இளம்பெண் ஒருவர் 'லெட் இட் கோ' (Let it Go)என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் ஒடேசா நகரில் உள்ள ஓபரா மற்றும் பாலே அரங்கை பாதுகாக்கும் தடுப்புகளுக்கு முன்னால் உக்ரைனிய இராணுவக்குழு 'டோன்ட் வொரி, பி ஹேப்பி( Dont worry Be happy)வாசித்த காட்சியும் காணொளியில் பதிவாகியுள்ளது.
Don't worry, be happy. In front of the barricades protecting now Opera House in #Odessa #Ukraine️ . @diariARA pic.twitter.com/KbquaYUEIK
— Cristina Mas (@cristinamas_) March 8, 2022



