அலையில் இழுத்துச் செல்லப்பட்ட ரஷ்யர்கள்
ஹிக்கடுவை பனங்கொட கடலில் குளித்துக்கொண்டிருந்த போது அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு ரஷ்யர்களை பொலிஸ் மற்றும் கடற்படையின் உயிர் காப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு நடந்ததாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காப்பாற்றப்பட்ட ரஷ்யர்கள் 27 மற்றும் 29 வயதான இளைஞர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஹிக்கடுவை பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் இவர்கள் நேற்று மாலை பனங்கொட கடலில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது கடல் அலையில் சிக்கி இருவரும் சுமார் 800 மீற்றர் தூரம் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். உடனடியாக செயற்பட்ட உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகள் இருவரையும் பாதுகாப்பாக காபாற்றி கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri