பலத்த காயங்களுடன் உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய ரஷ்யர்கள்
உக்ரைனில் (Ukraine) இருந்து, இடம்பெயர்ந்த குர்ஸ்க் குடியிருப்பாளர்கள் 33 பேர் மீண்டும் ரஷ்யாவிற்கு திரும்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து, அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையர் கூறுகையில், "தென்மேற்கு ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியைச் சேர்ந்த 33 பேர் உக்ரைனில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடுமையான காயங்கள்..
அவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் மற்றும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். அவர்களில் பலருக்கு கடுமையான காயங்கள் மற்றும் நோய் உள்ளது. ஓகஸ்ட் மாதம் ஊடுருவியதில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட குர்ஸ்க் குடியிருப்பாளர்கள் வலுக்கட்டயமாக இடம்பெயர்ந்தனர்.
ஆனால், கடந்த வாரம் கீவ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்துடன் மாஸ்கோ, வெளியிடப்படாத எண்ணிக்கையிலான குர்ஸ்க் குடியிருப்பாளர்களை உக்ரைனில் இருந்து பெலாரஸ் வழியாக சொந்த மண்ணுக்கு அனுப்ப வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொண்டது" என்றார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை இடம்பெற்று வரும் நிலையில், குர்ஸ்க் குடியிருப்பாளர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
