ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை சூப்பர் பவர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் ரஷ்ய போர் விமானங்கள்
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில்,உக்ரைனில் கடந்த 5 நாட்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷ்ய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது பறந்து சென்று குண்டுகளை வீசு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் நகரங்கள் மீது கடந்த 24 மணி நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் நடந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் முக்கிய நகரங்களை பிடிக்க ரஷ்யா கடும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், துறைமுக நகரான மரியுபோல் மீது ரஷ்ய போர் கப்பல்கள் கடந்த 3 வாரங்களாக தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சூப்பர் பவர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் போர் விமானங்கள் அலை அலையாக பறந்து சென்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 5 நாட்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷ்ய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது பறந்து சென்று குண்டுகளை வீசியுள்ளது.







உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
