ரஷ்ய இராணுவத்தில் இணையும் இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ரஷ்ய இராணுவத்தில் இனி இலங்கையர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செரன் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் இரு வெளிவிவகார அமைச்சர்களும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இதன்போது ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, இலங்கையின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவும் ஜூன் 26-27 திகதிகளில் ரஷ்ய அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 13 மணி நேரம் முன்
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam