இலங்கை வந்த ரஸ்ய நாட்டு சுற்றுலா பயணிக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு(Batticaloa) பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஸ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இன்று(10) கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
ரஸ்ய(Russia) நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய கரிசன் ஓ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
குறித்த நபர் இன்று காலை பாசிக்குடா கடலில் நீராடிய போது கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்ததை அவதானித்த அங்கு இருந்த கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளதுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam