பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் வெளிநாட்டு பிரஜை பரிதாபமாக பலி
பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (09.11.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய நாட்டுப் பிரஜை உயிரிழப்பு
இதன்போது கடலில் குளித்துக் கொண்டிருந்த 30 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அவர் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் சிக்கி நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, பெந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவரின் சடலம் பெந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரானியர்களுக்கு வழங்கப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு மாத்திரைகள்... அணு ஆயுதப் போர் குறித்த அச்சம் அதிகரிப்பு News Lankasri
பல ஆண்டுகளாக ஒலித்த பிக்பாஸ் குரல் நிறுத்தம்... ஜுனியர் பிக்பாஸாக மாறிய போட்டியாளர்! தலைகீழாக மாறிய ஆட்டம் Manithan