மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது - ரஷ்யா அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் நான்கு மாதங்களாக போர் நீடித்துள்ளது. இந்த போரில் இரு நாடுகளும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளன.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருவதன் காரணமாக மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக ரஷ்ய அரசு தொலைக்காட்சி தொகுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள Rossiya 1 தொலைக்காட்சி சேவையின் தொகுப்பாளர் Olga Skabeyeva, உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று அழைக்கப்படுவது முடிந்துவிட்டதாகவும், இது மூன்றாம் உலகப் போர்" என்றும் கூறியுள்ளார்.
இராணுவமயமாக்கலை விரிவுப்படுத்த வேண்டும்
இந்நிலையில், ரஷ்யா இப்போது நேட்டோ நாடுகளை உள்ளடக்கிய "இராணுவமயமாக்கல்" என்ற அதன் இலக்கை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
60 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியின் போது “உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை இப்போது ஒரு உண்மையான போர், மூன்றாம் உலகப் போர் தொடங்கியது என்ற அர்த்தத்தில் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இதுவென Olga Skabeyeva கூறியுள்ளார்.
"நாங்கள் உக்ரைன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நேட்டோவையும் நோக்கி இராணுவமயமாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்." டான்பாஸில் உக்ரேனிய துருப்புக்களால் அமெரிக்கன் M777 ஹோவிட்சர்களைப் பயன்படுத்துவது தன்னை முடிவுக்கு இட்டுச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
Olga Skabeyeva பிரபலமான தொகுப்பாளர் ஆவார். கருங்கடலில் ரஷ்ய போர்க்கப்பலான மோஸ்க்வா மூழ்கிய பின்னர் ஆறு வாரங்களுக்கு முன்பு மூன்றாம் உலகப் போர் தொடங்கியதாக அவர் முன்னர் கூறியிருந்தார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
