ரஷ்ய படையினரின் கொடூர செயல் - உக்ரைன் பெண்ணின் உருக்கமான பதிவு (Video)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருந்த நிலையில், பல்லாயிரக் கணக்கான பொது மக்களை கொலை செய்து அங்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
எனினும், இதனை ரஷ்யா தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. ஏப்ரல் 24ம் திகதி உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷ்யா தற்போது வரையிலும் தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைனின் புச்சா, மரியுபோல், தலைநகர் கிவ் மற்றும் போரோடியங்கா நகரங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
ரஷ்ய படையினர் தலைநகர் கிவ்வை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர், எனினும், அவர்கள் ஆழமாக காயமடைந்த உயிர்களை விட்டுச் சென்றுள்ளனர.
இந்நிலையில், உக்ரேனியப் பெண்கள் ரஷ்யபடையினரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை பிபிசி வெளியிட்டுள்ளது.
கிவ்வுக்கு மேற்கே 70கிமீ (45மைல்) தொலைவில் உள்ள அமைதியான கிராமப்புறத்தில் வசித்து வந்த 50 வயதுடைய பெண் ஒருவர் ரஷ்ய படையினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதுடன், அவரது கணவரை சுட்டு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்த பெண், “மார்ச் 7 அன்று ஒரு வெளிநாட்டு சிப்பாய் உள்ளே நுழைந்தபோது தனது கணவருடன் வீட்டில் இருந்தார். துப்பாக்கி முனையில், என்னை அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர் என் ஆடைகளை களையச் சொல்லி கட்டளையிட்டார்.
அவ்வாறு செய்யாவிட்டால் என்னை சுட்டு கொலை செய்துவிடுவேன் என அச்சுறுத்தினர். பின்னர் என்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினர். எனது கணவரையும் சுட்டுக்கொலை” செய்ததாக அவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.