இந்தியர்களை புகழும் ரஷ்ய அதிபர் புடின்
இந்தியர்கள் மிகவும் திறமையானவர்கள் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியில் இந்தியா மிகப் பெரும் சாதனைகளை படைக்கும் எனவும், அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் ஒற்றுமை தினத்தையொட்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் நாட்டு மக்களிடையே, உரையாற்றினார்.
அப்போது, ரஷ்யாவின் பெருமை, சிறப்புகள் குறித்தும், மற்ற நாடுகள் குறித்தும் தன் பேச்சில் அவர் குறிப்பிட்டார்.
இந்தியர்கள் மிகவும் திறமையானவர்கள்
இந்தியா குறித்து தன் பேச்சில் அவர் குறிப்பிடுகையில்
காலனி ஆதிக்கத்தின்போது, ஆப்ரிக்கா பெரிய அளவில் சூறையாடப்பட்டது. அவ்வாறு சூறையாடப்பட்ட வளத்தினாலேயே, ஐரோப்பிய நாடுகள் செழிப்பாக உள்ளன.
இந்த வரலாற்றை ஐரோப்பிய நாடுகளே மறுக்கவில்லை. காலனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்தியாவை பார்ப்போம். உள்நாட்டு வளர்ச்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ள இந்திய மக்கள், மிகவும் திறமையானவர்கள்.
அங்கு, 150 கோடி மக்கள் உள்ளது, இந்தியாவின் ஆற்றல் வளமாக அமைந்துள்ளது.
ருங்காலத்தில் இந்தியா வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனைகளை எட்டும் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.