புடினின் ஆட்சிக்கு எதிரான பிரச்சாரங்கள்! ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை
பயங்கரவாத குற்றச்சாட்டில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு கூடுதலாக 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நவால்னி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மிக முக்கியமான எதிரியாவார். மாஸ்கோவில் இருந்து கிழக்கே 145 மைல் தொலைவில் உள்ள மெலெகோவோவில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையில் நவால்னி ஏற்கனவே 11 1/2 ஆண்டுகள் சிறையில் உள்ளார்.
புதிய தண்டனை
இந்நிலையில் நவால்னிக்கு எதிரான வழக்கில்,ரஷ்ய நீதிபதி புதிய தண்டனையை வழங்கியுள்ளார்.
இதன்படி பயங்கரவாத குற்றச்சாட்டில் அலெக்ஸி நவால்னிக்கு கூடுதலாக 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புடினின் ஆட்சிக்கு எதிரான நவால்னியின் பிரச்சாரங்களில் இருந்து உருவாகும் சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்காக ரஷ்ய வழக்கறிஞர்கள் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரியுள்ளனர்.
நவால்னிக்கு எதிரான ஐந்தாவது பயங்கரவாத குற்றச்சாட்டு இதுவாகும்.
47 வயதான நவால்னி, விஷம் அருந்தியதில் இருந்து குணமடைந்து ஜேர்மனியில் இருந்து ரஷ்யாவுக்கு திரும்பிய பின்னர் 2021 முதல் சிறையில் உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |