உக்ரேனியர்களை கொல்ல மறுத்த ரஷ்ய அதிகாரி:மனைவி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
விளாடிமிர் புடினின் பாதுகாப்பு சேவையில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவர், உக்ரேனிய மக்களை கொல்ல மறுத்துள்ளார்.
இந்நிலையில் அவரை உக்ரைனுக்கு அனுப்ப இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் அருகாமையில் உள்ள நாடான கஜகஸ்தானுக்கு நடந்தே சென்றுள்ளார்.
இவ்வாறு கஜகஸ்தான் தப்பியவரை மீண்டும் ரஷ்யாவுக்கே நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போருக்கு எதிரான கருத்து
36 வயதான மேஜர் மிகைல் ஜிலின் உக்ரைன் மீதான போருக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளதால், தற்போது அவர் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் சித்திரவதையும் எதிர்கொள்ள இருக்கிறார் என அவரது மனைவி கவலை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் FSO அமைப்பின் அதிகாரியாக பணியாற்றிய மேஜர் மிகைல் ஜிலின், புடினின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து ரகசியங்களையும் தெரிந்துகொள்ளும் பொறுப்பில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் மேஜர் மிகைல் ஜிலின் உக்ரைன் மீதான போருக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார். FSO அமைப்பின் அதிகாரியாக செயல்படும் ஒருவர் வெளிநாடு செல்லவோ, கடவுச்சீட்டு வைத்துக்கொள்ளவோ அனுமதி இல்லை.
அடைக்கலம் அளிக்க மறுப்பு
இந்த நிலையில் நடந்தே கஜகஸ்தான் சென்றவருக்கு அடைக்கலம் அளிக்க அங்குள்ள நிர்வாகம் மறுத்துள்ளதுடன், மேஜர் மிகைல் ஜிலினை மீண்டும் ரஷ்யாவுக்கே நாடுகடத்தவும் முடிவு செய்துள்ளது.
போர் தொடர்பில் ஆயிரக்கணக்கான ரஷ்ய மக்களுக்கு அடைக்கலம் அளித்துள்ள கஜகஸ்தான் நிர்வாகம், ஆனால் மேஜர் மிகைல் ஜிலின் தொடர்பில் கருணை காட்ட மறுத்துள்ளது.
ரஷ்ய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மாயமாகியுள்ளதாகவும், அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவார் அல்லது போர்க்களத்திற்கு அனுப்பப்படுவார் என அவர் மனைவி தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
