புடினை வீழ்த்த பிரித்தானிய உளவுத்துறைக்கு உதவிய ரஷ்யர்கள்! அம்பலப்படுத்திய உளவுத்துறை தலைவர்
உக்ரைன் - ரஷ்ய போரினால் வெறுப்படைந்துள்ள ரஷ்யர்கள் பிரித்தானியாவுக்கு உதவ முன்வந்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறை தலைவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் நகரங்களை நாசம் செய்து, அப்பாவி உக்ரைனியர்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி, ஆயிரக்கணக்கான பிள்ளைகளை கடத்தும் ரஷ்ய படையினரின் கொடூர செயல் காரணமாகவே இவ்வாறு ரஷ்யர்கள் வெறுப்படைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உளவுப்பார்க்க முன்வந்த ரஷ்யர்களை தாம் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், குறித்த ரஷ்யர்களின் இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும், ரஷ்யர்களும், பிரித்தானியர்களும் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டு வர பாடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |