உக்ரைனின் முக்கிய நகரத்தை இலக்கு வைத்த ரஷ்ய ஏவுகணைகள்
தீவிரமடைந்துவரும் உக்ரைன் - ரஷ்ய போரில் இரு தரப்புக்குமிடையே தற்போது தாக்குதல் நகர்வுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி இன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிதத்திலிருந்து சுமார் 22 பேர் மீட்கப்பட்டதாக உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.
உக்ரைன் இராணுவம்
குறித்த தாக்குதலானது, உக்ரைனின், பொல்டாவா நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், உக்ரைன் இராணுவமும் பதிலுக்கு ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.
இதில் ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் 9 ட்ரோன்களை இடைமறித்து தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |