நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விண்கலத்தினால் ஏற்பட்டுள்ள விளைவு: நாசா வெளியிட்டுள்ள புகைப்படம்
சமிபத்தில் தோல்வியுற்ற ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் சந்திரனில் விழுந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ரஷ்ய நிலவு ஆய்வு லேண்டர் லூனா 25 விபத்துக்குள்ளானதால் 10 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 19 அன்று லூனா 25 கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் மோதியது.
இந்நிலையில் விபத்து ஏற்பட்ட பகுதியில் சந்திர மேற்பரப்பில் ஒரு புதிய பள்ளத்தை அமெரிக்க தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் சந்திர உளவு ஆர்பிட்டரா கண்டுபிடித்துள்ளது.
நிலவின் மண்னை சோதி்த்தல்
பள்ளம் ஏற்படுவதற்கு முன், பள்ளம் உண்டான பின் எடுக்கப்பட்ட இரு புகைப்படங்களையும் நாசா வெளியிட்டுள்ளது.
லூனா 25-ன் நோக்கம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணைச் சோதித்து நீர் இருப்பதை மதிப்பிடுவதாகும்.
ஆனால் சுற்றுப்பாதையில் செல்லும் போது, லூனா 25 கட்டுப்பாட்டை இழந்து மேற்பரப்பில் மோதியது. மேலும் இந்த தோல்விக்கான காரணங்களை ஆராய ரஷ்யா ஒரு இடைநிலைக் குழுவை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |