அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை போரில் பயன்படுத்திய உக்ரைன்! பேரிழப்புகளை சந்திக்கும் ரஷ்யா
மாஸ்கோவின் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் தெற்கு ஜபோரிஜியா பகுதியில் ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆர்.ஐ.ஏ நோவோஸ்டி மற்றும் இஸ்வெஸ்டியா செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய பத்திரிகையாளர்கள், வாசிலிவ்கா நகருக்கு கிழக்கே சிவிலியன் காரில் சென்று கொண்டிருந்தபோது, பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளானதாக ஆர்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
நால்வரில் ஒருவரான RIA பத்திரிக்கையாளர் ரோஸ்டிஸ்லாவ் ஜுராவ்லேவ், ரஷ்ய வீரர்கள் வெளியேற்றும் போது இறந்ததாக அரசுக்கு சொந்தமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் குற்றச்சாட்டு
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், நால்வரும் கிளஸ்டர் வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் குறித்த விடயம் உறுதிப்படுத்தவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் வாஷிங்டன் முதல் முறையாக அவற்றை அனுப்புவதாக அறிவித்ததை அடுத்து, அமெரிக்கா வழங்கிய கொத்து குண்டுகளை உக்ரைன் போரில் பயன்படுத்த தொடங்கியது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலோபாய தகவல்தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, ரஷ்யாவின் தற்காப்பு அமைப்புகளில் உக்ரைன் அவற்றை "பொருத்தமாக" மற்றும் "திறனுடன்" பயன்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |