உக்ரைன் - ரஷ்ய போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது - மோடி தகவல்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக எரிபொருள் விலை மிகவும் உயர்ந்திருக்கிறது.
அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெர்மனிக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“உலகில் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெருந்தொற்று ஏற்பட்டதை நாம் போர் என்று குறிப்பிட்டிருந்தோம். இந்தப் போரில் வெற்றி முக்கியமல்ல. அனைவரும் இதில் ஈடுபடவேண்டும். அமைதியாக நாம் இதை எதிர்கொள்ள வேண்டும்.
உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு என கூறியிருந்தோம். இந்தப் போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம். உக்ரைன், ரஷ்யா மோதலால் எண்ணெய் விலை மிகவும் உயர்ந்திருக்கிறது.
அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. நாம் இதை மிகவும் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். இதனுடைய பாதிப்பும் தீவிரமாக இருக்கும்.
இந்தியா இந்த பொருளாதார நிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மற்ற நட்பு நாடுகளுடனும் ஏற்றுமதி இறக்குமதியில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியை எப்படி எட்ட வேண்டும் என்பதற்கு உதவி செய்துகொண்டிருக்கிறது.
அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியா - ஜெர்மனி நட்புறவில் புதிய தொடக்கம் உருவாகியிருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
