இலங்கையில் கடலில் குளித்த ரஷ்ய பெண்ணின் பொருட்கள் மாயம்
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட ரஷ்யா பெண்ணின் பெறுமதியான பொருட்கள் காணாமல் போயுள்ளன.
தடல்ல கடற்கரையில் நேற்று நீராடச் சென்ற ரஷ்ய பெண் ஒருவரின் சுமார் 600000 ரூபா பெறுமதியான ஆப்பிள் கையடக்கதொலைபேசியும் 3000 ரூபாய் அடங்கிய பையையும் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தடல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த இந்த வெளிநாட்டுப் பெண் தனது மகளுடன் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் பின்புறம் உள்ள கடலுக்கு குளிக்க சென்று திரும்பி வரும் போது பை காணாமல் போயுள்ளது.
உடனடியாக சம்பவம் தொடர்பில் காலி பொலிஸாரிடம் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
காலி பொலிசார் மற்றும் கோட்டை சுற்றுலா பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
