உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் - ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்
உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 7 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்- நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது.
அந்த சிறப்புக்கூட்டத்தில் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. சபையில் இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளதுடன், இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன.
இந்த தீர்மானத்திற்கு எதிராக 5 நாடுகள் வாக்களித்தன. இதன் மூலம் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam