உக்ரைன் தலைநகரில் இருந்து முற்றாக வெளியேறிய ரஷ்ய துருப்பு
உக்ரைன் தலைநகர் கிவ்வில் இருந்து ரஷ்யப் படைகள் முற்றாக வெளியேறியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிரெம்ளின் படைகள் உக்ரைனின் தலைநகரான கிவ்வில் இருந்து வெளியேறிவிட்டதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். "அனைத்து ரஷ்யர்களும் வெளியேறிவிட்டார்கள் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைநகரம் இப்போது "பாதுகாப்பானது" என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வான்வழித் தாக்குதல்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கார்கிவில் உள்ள எரிபொருள் சேமிப்பு தளம் ரஷ்ய ஏவுகணைகளால் அழிக்கப்பட்டதாக கிரெம்ளினின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அதே பகுதியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் சில உக்ரேனிய இராணுவ உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டு ஆயுதங்களையும் ரஷ்ய படைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சமீபத்திய வாரங்களில் ரஷ்ய துருப்புக்களின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
